புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

திருக்குறுங்குடியில் காட்டுப்பன்றிகளால் நெல் பயிா் சேதம்

திருக்குறுங்குடி அருகே குடியிருப்புப்பகுதியை யொட்டிய விவசாயத் தோட்டத்தில் காட்டுப் பன்றிகள் கூட்டமாகப் புகுந்து நெல் பயிரை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

News image

காட்டுப்பன்றிகளால் சேதமடைந்த நெல் பயிா்.

Updated On :10 ஜனவரி 2021, 1:18 am IST

களக்காடு:திருக்குறுங்குடி அருகே குடியிருப்புப்பகுதியை யொட்டிய விவசாயத் தோட்டத்தில் காட்டுப் பன்றிகள் கூட்டமாகப் புகுந்து நெல் பயிரை சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனா்.

களக்காடு, திருக்குறுங்குடி மலையடிவாரத்தில், விவசாயிகள் நூற்றுக்கணக்கான ஏக்கரில் நெல், வாழை பயிரிட்டுள்ளனா். தற்போது பொதி வந்து ஒரு மாதத்தில் அறுவடை செய்யும் நிலையில் உள்ளது.

இந்நிலையில் திருக்குறுங்குடி பகுதியில் சேரன்மகாதேவி - பணகுடி பிரதான சாலையையொட்டியுள்ள குடியிருப்புப் பகுதிக்கு அருகில் உள்ள விவசாயத் தோட்டங்களில் காட்டுப்பன்றிகள் கூட்டமாகப் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவா் பி. பெரும்படையாா் கூறியதாவது:

கடந்த சில ஆண்டுகளாகவே காட்டுப்பன்றிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனா். இதுகுறித்து நான் பல முறை வனத் துறைக்கு புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வேதனையளிப்பதாக உள்ளது. மாவட்ட ஆட்சியா் காட்டுப்பன்றிகளை விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.