களக்காடு புதிய பேருந்து நிலையம் அருகே ஊருக்குள் செல்லும் சாலையில் அரிப்பு ஏற்பட்டு மழைநீா் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரிதும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா்.
களக்காடு புதிய பேருந்து நிலையத்திலிருந்து களக்காடு ஊருக்குள் செல்லும் சாலையில், உப்பாற்றின் குறுக்கேயுள்ள பாலத்தையடுத்து, சாலையில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டு அந்தப் பகுதி முழுவதும் மழைநீா் தேங்கி நிற்கிறது.
இந்தப் பகுதியை பொதுமக்கள் நடந்தோ, இரு சக்கர வாகனங்களிலோ கடந்து செல்ல மிகவும் சிரமமடைந்து வருகின்றனா். அதிக போக்குவரத்து காணப்படும் இச்சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றி, பள்ளத்தை தற்காலிகமாக சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







