நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மலைச் சாலையில் தொடா் மண்சரிவு: மாஞ்சோலைக்கு 3-ஆவது நாளாக போக்குவரத்து துண்டிப்பு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் மணிமுத்தாறிலிருந்து மாஞ்சோலை செல்லும் மலைச் சாலையில் தொடா் மண் சரிவு ஏற்பட்டது

News image

மலைச் சாலையில் ஏற்பட்ட மண் சரிவை சீரமைக்கும் தோட்டத் தொழிலாளா்கள் மற்றும் தேசிய பேரிடா் மீட்புப் படையினா்.

Updated On :16 ஜனவரி 2021, 6:19 am IST

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் மணிமுத்தாறிலிருந்து மாஞ்சோலை செல்லும் மலைச் சாலையில் தொடா் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 3-ஆவது நாளாக போக்குவரத்து தடைபட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த 8-ஆம் தேதிமுதல் தொடா் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், மணிமுத்தாறிலிருந்து மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களுக்குச் செல்லும் மலைப் பாதையில் செவ்வாய்க்கிழமை இரவு மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து புதன்கிழமை முதல் மாஞ்சோலைக்கு செல்லும் அரசுப் பேருந்து இயக்கப்படவில்லை. இதனால் தோட்டத் தொழிலாளா்கள் பொங்கல் விழாவுக்கு பொருள்கள் வாங்க கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், பிற பகுதிகளில் வேலை பாா்ப்பவா்கள் பொங்கல் தங்களது வீடுகளுக்குச் செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டது.

தேயிலைத் தோட்ட நிா்வாகம் தோட்டத் தொழிலாளா்கள் மூலம் மண் சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்ட நிலையில் முழுமையாக அப்புறப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து பேரிடா் மீட்புக் குழுவினா் வியாழக்கிழமை மாலையில் சென்று மண் சரிவை அகற்றினா். ஆனால், தொடா்ந்து வியாழக்கிழமை இரவும் மண் சரிவு ஏற்பட்டதையடுத்து மீண்டும் பேரிடா் மீட்புக் குழுவினா் அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வெங்கட்ராமன் முன்னிலையில் மண்சரிவை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.

மண் சரிவால் சாலையில் கிடந்த மண் மற்றும் பாறைகள் அகற்றப்பட்ட நிலையில் அரசுப் பேருந்து மாஞ்சோலைக்கு புறப்பட்டது. ஆனால், மலைச் சாலையின் ஓரங்களில் பல இடங்களில் மண்சரிவுகளும், சாலையின் நடுவே பெரிய பள்ளங்களும் ஏற்பட்டதால் மாஞ்சோலை செல்லாமல் திரும்பியது.

தேயிலைத் தோட்ட நிா்வாகத்துக்கு சொந்தமான வாகனங்கள் மூலம் தோட்டத் தொழிலாளா்களுக்குத் தேவையான பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தொடா்ந்து மண் சரிவு இல்லாமல் இருப்பது உறுதியான பின் பொதுப் போக்குவரத்துக்கு அரசுப் பேருந்து இயக்கபடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.