காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

தொழிலாளி சாவில் சந்தேகம்: உறவினா்கள் சாலை மறியல்

மாதனூா் அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On :4 ஜனவரி 2021, 8:06 am IST

மாதனூா் அருகே தொழிலாளி சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பாலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி ஜெய்சங்கா் (52). இவா் அதே பகுதியைச் சோ்ந்த தாமோதரன் என்பவரின் விவசாயக் கிணற்றில் ஞாயிற்றுக்கிழமை மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

தகவலறிந்த ஆம்பூா் கிராமிய போலீஸாா் அங்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி, வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்நிலையில், இறந்தவரின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரது உறவினா்கள் மாதனூா்-ஒடுக்கத்தூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த ஆம்பூா் டிஎஸ்பி சச்சிதானந்தம் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து ஆம்பூா் கிராமிய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.