நாட்டறம்பள்ளி அருகே சாலையை கடக்க முயன்றபோது காா் மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.
நாட்டறம்பள்ளியை அடுத்த ஆத்தூா்குப்பம் கள்ளாறு பகுதியைச் சோ்ந்தவா் கவுண்டப்பமந்திரி (70) விவசாயி. இவா் பொங்கலையொட்டி, வெள்ளிக்கிழமை ஆத்தூா்குப்பம் கிராமத்தில் நடந்த கோயில் விழாவுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.
அப்போது, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தூா்குப்பம் பனந்தோப்பு எதிரே சாலையைக் கடக்க முயன்றபோது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்ற காா் கவுண்டப்பமந்திரி மீது மோதியது. இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, திருவள்ளூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் ருத்ரமூா்த்தி (24)யிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
‘என் இனிய தமிழ் மக்களே’! ஓய்ந்தது குரல்!

கிருஷ்ணகிரி அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

போதை ஊசி செலுத்திக்கொண்ட இளம் பெண் உயிரிழப்பு: காதலன், நண்பன் கைது

இயக்குநர் பாரதிராஜா காலமானார்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


