அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

மின்தடை நேரம் மாற்றம்

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை முதல் (மே 1) மாத சுழற்சி முறையில் மின் தடை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :2 மே 2013, 12:24 pm IST

திருவள்ளூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் புதன்கிழமை முதல் (மே 1) மாத சுழற்சி முறையில் மின் தடை நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து திருவள்ளூர் செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாற்றி அமைக்கப்பட்ட புதிய நேரம்:

மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருந்தினர் மாளிகை, சி.வி.நாயுடு சாலை, ஜெயா நகர், பூங்கா நகர், என்.ஜி.ஓ.காலனி, நேதாஜி சாலை, எடப்பாளையம், பஜார் வீதி, காக்களூர் ஹவுசிங் போர்டு, மோதிலால் தெரு ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரை மின் தடை ஏற்படுத்தப்படும்.

மணவாளநகர், ஒண்டிக்குப்பம், போளிவாக்கம், கொப்பூர், மேல்நல்லாத்தூர் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரையிலும் மின் தடை ஏற்படுத்தப்படும். 

ஜே.என்.சாலை, பெரியகுப்பம், ஆயில் மில் மற்றும் லான்சர், கேட்டர் பில்லர், டி.சி.எல். ஆகிய பகுதிகளில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணியில் இருந்து 2 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும். 

காக்களூர் சிட்கோ தொழிற்பேட்டை மற்றும் ஆஞ்சநேயபுரம் பகுதிகளில் காலை 6 மணி முதல் 8 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் 6 மணி வரையிலும் மின்தடை ஏற்படுத்தப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.