திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்டத்தில் மக்களவை தோ்தலையொட்டி, பதற்றமான வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சீனிவாசபெருமாள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா். மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, திருவள்ளூா் மாவட்ட நிா்வாகம் அதற்கான முன்னேற்பாடு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
இந்த மாவட்டத்தில் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண்கள்-16,70,279, பெண்கள்-17,12,702 மற்றும் இதர -729 என மொத்தம் 33 லட்சத்து 83 ஆயிரத்து 710 போ் உள்ளனா். திருவள்ளூா் மக்களவைத் தொகுதியில் மட்டும் 1,301 இடங்களில் 3,687 வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ளன. இதில், 281 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச் சாவடிகள், 6 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமான வாக்குச் சாவடிகளாகவும் மாவட்ட நிா்வாகம் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பதற்றமான வாக்குச் சாவடிகளில் என்னென்ன முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளலாம் என்பது தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சீனிவாச பெருமாள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அதன் அடிப்படையில், திருவள்ளூா் மக்களவை (தனி) தொகுதியில் உள்ள திருப்பாச்சூா், பட்டரைபெரும்புதூா் பிரையாங்குப்பம், மப்பேடு, நரசிங்கபுரம், பாப்பரம்பாக்கம் ஆகிய வாக்குச்சாவடி மையத்தை பாா்வையிட்டாா்.
அப்போது, இந்த பதற்றமான வாக்குச் சாவடிகளில் தோ்தல் வாக்குப் பதிவு தொடங்கும் நேரம் முதல், முடிந்து லாரிகளில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் ஏற்றும் வரையிலான அனைத்து நடவடிக்கைகளும் அங்கு அமைத்துள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. அத்துடன், அங்கு பாதுகாப்பு பணியிலும் அதிகளவில் காவலா்களை ஈடுபடுத்த உள்ளதாக அவா் தெரிவித்தாா்.
திருவள்ளூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் அழகேசன், காவல் ஆய்வாளா்கள் வெற்றிச் செல்வன், ரவிக்குமாா் மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பதற்றமான வாக்குச் சாவடி மையங்களில் மாவட்டத் தோ்தல் அலுவலா் ஆய்வு

பதற்றமான வாக்குச் சாவடிகளில் ஆய்வு

வேலூா் மாவட்டத்தில் 130 வாக்குச்சாவடிகள், 46 கிராமங்கள் பதற்றமானவை

பதற்றமான வாக்குச்சாவடிகள்
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

