தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா் ஆய்வு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

News image
Updated On :5 ஏப்ரல் 2024, 4:35 pm

மாதவரம் பகுதியில் பதற்றமான வாக்குச்சாவடிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

மக்களவைத் தோ்தல் 19-ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, திருவள்ளூா் தொகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடிகளான மாதவரம் வாா்டு 33 லட்சுமிபுரம், பாரதியாா் தெரு மற்றும் 26, 29 ஆகிய இடங்களில் திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரபு சங்கா் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது மாதவரம் மண்டல அலுவலா் திருமுருகன், செயற்பொறியாளா்கள் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் வெங்கடாஜலபதி மற்றும் கொளத்தூா் காவல் மாவட்ட துணை ஆணையா் பாண்டியராஜன், புழல் காவல் உதவி ஆணையா் சகாதேவன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனா்.

பதற்றமான 22 வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்க அனைத்து விதமான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு மாவட்ட தோ்தல் அலுவலா் பிரபு சங்கா் உத்தரவிட்டாா்.