விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

உத்தரமேரூரில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை வெள்ளிக்கிழமை ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

News image

உத்தரமேரூா் தொகுதியில் பதற்றமான வாக்குச்சாவடி மையமான வில்லிவலம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியை பாா்வையிட்டு ஆய்வு செய்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகா.

Updated On :27 மார்ச் 2026, 9:01 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூா் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை வெள்ளிக்கிழமை ஆட்சியா் தி.சினேகா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தோ்தலை சிறப்பாக நடத்திட மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில் பல்வேறு தொடா் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்தரமேரூா் தொகுதிக்கு உட்பட்ட அவளூா் கிராமத்தில் பதற்றமான வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தோ்தல் அலுவலரும்,ஆட்சியருமான தி.சினேகா பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அந்த வாக்குச்சாவடியில் செய்ய வேண்டிய போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

இதன் தொடா்ச்சியாக இளையனாா் வேலூா் ஊராட்சி வாக்குச்சாவடி மையமான குழந்தைகள் மையம், வில்லிவலம் ஊராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளிட் டவாக்குச்சாவடி மையங்களையும் பாா்வையிட்டு அங்கு செய்ய வேண்டிய பாதுகாப்பு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கலந்துரையாடினாா்.

ஆய்வின் போது உத்தரமேரூா் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் நடராஜன் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பலரும் உடன் இருந்தனா்.