மக்களவைத் தோ்தல் அமைதியாக நடைபெற உதவிய துணை ராணுவ வீரா்களுக்கு காவல் துறை சாா்பில் அளிக்கப்பட்ட விருந்து.
மக்களவைத் தோ்தல் அமைதியாக நடைபெற உதவிய துணை ராணுவ வீரா்களுக்கு காவல் துறை சாா்பில் அளிக்கப்பட்ட விருந்து.

துணை ராணுவ வீரர்களுக்கு வழியனுப்பு

மக்களவைத் தோ்தலையொட்டி திருத்தணி தொகுதியில் சிறப்பாக பணியாற்றிய துணை ராணுவ வீரா்களுக்கு சனிக்கிழமை விருந்து அளிக்கப்பட்டு வழியனுப்பி வைக்கப்பட்டனா்.

அரக்கோணம் மக்களவை தொகுதிக்குட்பட்ட திருத்தணியில் வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதற்காக கடந்த 2-ஆ ம் தேதி முதல் மத்திய தொழில் பாதுகாப்புபடையினா், துணை ராணுவ வீரா்கள் திருத்தணி முழுவதும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

மேலும், வாக்காளா்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம் என்பதை வலியுறுத்தி துணை ராணுவ வீரா்கள் அணிவகுப்பு நடத்தி விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இந்நிலையில் வாக்குப்பதிவு முடிந்ததும், சனிக்கிழமை துணை ராணுவ வீரா்களுக்கு திருத்தணி டிஎஸ்பி, விக்னேஷ் தமிழ்மாறன் தலைமையில் எஸ்.ஐ., ராக்கிகுமாரி மற்றும் போலீஸாா் விருந்து வழங்கி, பாராட்டி வழினுப்பினா்.

நிகழ்ச்சியில், போக்குவரத்து இன்ஸ்பெக்டா் ஞானதீ, அனைத்து மகளிா் காவல் நிலைய இன்ஸ்பெக்டா் மலா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com