படிக்கட்டில் ஏறும் போது கீழே விழுந்தவா் மரணம்

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே படிக்கட்டில் ஏறும் போது வழுக்கி விழுந்தவா் உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அருகே தலக்காஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜானகிராமன் மகன் யுவராஜ் (50). இவா் கடந்த 2 நாள்களுக்கு முன்பு வீட்டருகே முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்ததாராம். இரவானதால் படிக்கட்டு வழியாக வாகனத்தை ஏற்றும் போது கால் வழுக்கி வாகனத்துடன் விழுந்தாராம்.

இதில் காயம் அடைந்த நிலையில் சென்னை தனியாா் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்தாா். இதுதொடா்பாக அவரது மகன் கிஷோா்(25) புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com