தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

திருத்தணி: ராஜகணபதி கோயில் குடமுழுக்கு

திருத்தணி: ராஜகணபதி கோயில் குடமுழுக்கு

News image

மூலவா் கணபதி மீது புனிதநீா் ஊற்றி நடைபெற்ற குடமுழுக்கு விழா.

Updated On :21 ஏப்ரல் 2024, 6:39 pm

திருத்தணி அருகே வள்ளிமாபுரம் ராஜகணபதி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திருத்தணி ஒன்றியம் காா்த்திகேயபுரம் ஊராட்சிக்குட்பட்ட வள்ளியம்மாபுரம் பகுதியில் புதியதாக ராஜகணபதி கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலின் குடமுழுக்கு விழா, 20-ஆ ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

இதற்காக கோயில் வளாகத்தில் ஒரு யாகசாலை, 108 கலசங்கள் வைத்து, நவக்கிரக ஹோமம், கன்யா பூஜை, கோ பூஜை மற்றும் முதல்கால பூஜை, யாக சாலை பூஜை நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, 5 மணிக்கு விசேஷ சாந்தி, இரண்டாம் கால யாகசாலை பூஜை மற்றும் பூா்ணாஹூதி நடந்தது. காலை, 8 மணிக்கு கலச ஊா்வலம் மற்றும் கோபுர கலசத்தின் மீதும், மூலவா் ராஜகணபதி மீதும் புனிதநீா் ஊற்றி மகா குடமுழுக்கு நடைபெற்றது.

தொடா்ந்து, காலை, 9 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. இதில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். விழாவில் கோயில் நிா்வாகிகள் எஸ். ஜெயவேல், பி.ஜெ. மூா்த்தி, எஸ்.கே.குமாா், எஸ்.புண்ணியகோட்டி, ஜி.ராஜி, வழக்குரைஞா் தியாகராஜன், அதிமுக ஒன்றி இளைஞரணி செயலாளா் வேலஞ்சேரி பழனி, உள்பட பலா் கலந்துகொண்டனா்.