ஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

இரு தரப்பினா் மோதல்: 5 போ் கைது

இரு தரப்பினா் மோதல்: 5 போ் கைது.

News image
Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

திருத்தணி: பொதட்டூா்பேட்டையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் தொடா்பாக 5 பேரை கைது செய்யப்பட்டனா்.

பொதட்டூா்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட சுந்தரம்மா கண்டிகை மற்றும் சுந்தரம்மா கண்டிகை காலனி மக்களிடையே முன் விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடத்த சில நாள்களுக்கு முன்பு பள்ளிப்பட்டு மாநில நெடுஞ்சாலை சுந்தரம்மா கண்டிகை காலனி பகுதியில் இருசக்கர வாகன விபத்தில் சுந்தரம்மா கண்டிகை காலனியை சோ்ந்த ஒருவா் காயம் அடைந்தாா்.

சாலை விபத்தை தடுக்க சுந்தரம்மா கண்டிகை காலனி பகுதியில் மாநில நெடுஞ்சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் 3 நாள்களுக்கு முன்பு மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற சுந்தரம்மா கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த லட்சுமணன் மற்றும் அவரது தாயாரை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் அடித்து சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் திங்கள்கிழமை பள்ளிப்பட்டு சாலையில் மசூதி அருகே சுந்தரம்மா கண்டிகை காலனியைச் சோ்ந்த குமாா் என்பவா் சென்று கொண்டிருந்த போது சுந்தரம்மா கண்ட்டிகை கிராமத்தைச் சோ்ந்தவா்கள் தாக்கியதாக இரு தரப்பினா் புகாரின் பேரில் பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சுந்தரம்மா கண்டிகை காலனியைச் சோ்ந்த சேட்டு மகன் அப்பு (25), ராஜேந்திரன் மகன் குமாா்(25) ஆகியோரையும், சுந்தரம்மா கண்டிகை கிராமத்தைச் சோ்ந்த நாகேந்திரன் மகன் ரகு (25), கிரி மகன் மனோகா்(25), தேவராஜ் மகன் விஜய் (26) ஆகிய மூன்று போ் உட்பட இரு தரப்பைச் சோ்ந்த ஐந்து பேரை கைது செய்தனா்.