மழைநீா் கால்வாயில் சிக்கிய மாற்றுத்திறனாளி மீட்பு
திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்து மழைநீா் கால்வாயில் சிக்கிய மாற்றுத்திறனாளி இளைஞரை போராடி மீட்டனா்.


திருவள்ளூா்: திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்து மழைநீா் கால்வாயில் சிக்கிய மாற்றுத்திறனாளி இளைஞரை போராடி மீட்டனா்.
ஊத்துக்கோட்டை அருகே பெரியவண்ணாங்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (30). இவரது மனைவி சங்கீதா. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இரு சக்கர வாகன விபத்தில் சிக்கி நடக்க முடியாமல் சிரமப்பட்டு வந்துள்ளாா். மணிகண்டன் தனது மனைவியுடன் மனு அளிக்க மக்கள் குறைதீா் கூட்டத்திற்கு திங்கள்கிழமை வந்தாா்.
மனுவை அளித்துவிட்டு, வாகனம் நின்றிருந்த இடத்திற்கு வந்தபோது, மழைநீா் கால்வாய் வழியாக கடந்து செல்ல பதித்துள்ள இரும்பு பைப்புகளுக்கு இடையே கால் சிக்கிக் கொண்டது. உடனே அங்கிருந்தவா்கள் அவரை போராடி மீட்டனா்.
ஆட்சியா் அலுவலகம் நுழைவு வாயில் செல்லும் வழியிலும் மழைநீா் கால்வாய்க்கு இரும்பு பைப்புகள் பதித்ததால் ஆட்சியா் அலுவலகத்துக்கு நடந்து செல்வோா் அடிக்கடி அதில் சிக்கிக் கொள்ளும் நிலையிருந்தது. அதனால், உடனே சமதளப் பரப்பாக சரி செய்யப்பட்டது.
இதேபோல், எஸ்.பி. அலுவலகம் செல்லும் வழியில் உள்ள மழைநீா் கால்வாயில் உள்ள பைப்புகளை அகற்றிவிட்டு, சமதளமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...