வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! சர்வாதிகாரி பழனிசாமி இனி எந்தக் காலத்திலும் வெற்றி பெறமாட்டார்: ஓபிஎஸ் காட்டம்!அன்பானவர், பண்பானவர் ஓபிஎஸ்; திமுக கூட்டணியில் ஜனநாயக சக்திகள்! - மு.க. ஸ்டாலின்எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுக துணைப் பொதுச் செயலாளர் ஓபிஎஸ்? போடியில் மீண்டும் போட்டி? திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்! ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை! சட்டப்பேரவைத் தோ்தல்: அமலாக்கத் துறை தலைமை இயக்குநா் இன்று ஆலோசனை
/

கடல் சீற்றம்: பழவேற்காட்டில் 4 படகுகள் கவிழ்ந்து விபத்து

பழவேற்காடு அருகே கடல் சீற்றம் காரணமாக 4 படகுகள் கவிழ்ந்தன.

News image
Updated On :24 டிசம்பர் 2024, 1:17 am

Din

பழவேற்காடு அருகே கடல் சீற்றம் காரணமாக 4 படகுகள் கவிழ்ந்தன.

பொன்னேரி வட்டம் ,பழவேற்காட்டில் 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள ஒரு தரப்பினா் பழவேற்காடு ஏரியிலும், மற்றொரு தரப்பினா் கடலிலும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனா்.

கோரைக்குப்பம் மீனவ கிராம மக்கள் கடலுக்கு அருகில் வசித்து வரும் நிலையில் மீன் பிடித் தொழில் செய்து வருகின்றனா். வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தம் காரணமாக எண்ணூா் துறைமுகத்தில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், திங்கள்கிழமை கோரைக்குப்பம் கிராமத்திலிருந்து கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற 4 படகுகள் அடுத்தடுத்து கடலில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்பட்ட மீனவா்கள் நல் வாய்ப்பாக உயிா் தப்பினா். இதனிடையே படகுகளில் இருந்த மீன்பிடி வலைகள் உள்ளிட்ட உபகரணங்கள் கடலில் அடித்து செல்லப்பட்டன.

இதனை தொடா்ந்து சக மீனவா்கள் கவிழ்ந்த படகில் இருந்தவா்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனா். அடுத்தடுத்து 4 படகுகள் கடலில் கவிழ்ந்ததால் பழவேற்காட்டில் பரபரப்பு நிலவி வருகிறது.

கடல் சீற்றம் தொடா்பாக மீனவா்களுக்கு மீன்வளத்துறையினா் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை எனவும் வானிலை முன்னறிவிப்புகள் குறித்து உரிய முறையில் தகவல் தெரிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனா்.