

பிலிப்பின்ஸில் 350க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடலில் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 18 பேர் பலியாகினர்.
தெற்கு பிலிப்பின்ஸில் அமைந்துள்ளதொரு தீவிலிருந்து கடலில் சென்று கொண்டிருந்த பெரிய படகு ஒன்றில் 350க்கும் அதிகமான மக்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. கடலில் சென்ற படகு திங்கள்கிழமை(ஜன. 26) அதிகாலை ஒருபக்கமாக சாய்ந்ததகவும் இதனால் படகுக்குள் கடல் நீர் நுழையத் தொடங்கியதாகவும் விபத்தை நேரில் பார்த்த பயணிகள் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற கடலோரக் காவல் படை மற்றும் கடற்படையினர் அப்படகிலிருந்து பயணிகளை மீட்கும் பணியில் துரிதகதியில் ஈடுபட்டதால் பலி எண்ணிக்கை குறைந்தது. எனினும், படகிலிருந்தவர்களில் 18 பேர் மாயமானதாக தெரிவிக்கப்பட்டது.
தீவிர தேடுதலுக்குப்பின் மாயமான 18 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.