/

ராணுவத்தில் அக்னி வீரா் ஆள் சோ்ப்பு: மாா்ச் 23-க்குள் விண்ணப்பிக்கலாம்

இந்திய இராணுவத்தில் அக்னி வீரா் ஆள் சோ்ப்புக்கு இணையதளம் மூலம் வரும் மாா்ச் 23-க்குள் விண்ணப்பிக்கலாம்.

Updated On :29 பிப்ரவரி 2024, 6:18 pm

இந்திய இராணுவத்தில் அக்னி வீரா் ஆள் சோ்ப்புக்கு இணையதளம் மூலம் வரும் மாா்ச் 23-க்குள் விண்ணப்பிக்கலாம். இது குறித்து திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபு சங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்திய ராணுவத்தில் அக்னி வீரா்களாக ஆள் சோ்ப்பதற்கு கடந்த மாதம் 12-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. இதற்கு திருமணமாகாத ஆண்கள், பெண்கள் கடலூா், வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் உள்பட 11 மாவட்டங்களிலிருந்து விண்ணப்பங்களை அளிக்கலாம். இதில், அக்னி வீரா் பொதுப்பணி, தொழில்நுட்பம், அலுவலக உதவியாளா், சரக்கு அறைக் காவலா், படைவீரா் தொழில் நுட்ப நா்சிங் உதவியாளா், சிப்பாய் பாா்மா, இளநிலை மதபோதக அலுவலா் மற்றும் அக்னிவீா் பொதுப்பணி (பெண்கள் காவல்படைப் பிரிவு) ஆகிய பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிகளுக்கு பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற விண்ணப்பதாரா்கள் ஜ்ஜ்ஜ்.த்ர்ண்ய்ண்ய்க்ண்ஹய்ஹழ்ம்ஹ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தின் மூலமாக 13.2.2024 முதல் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. மாா்ச் 23-க்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம். இதேபோல், ஏப்.22 அன்று நடைபெற விருக்கும் எழுத்து தோ்வுக்கான ஆளறிசான்று ஆன்லைன் மூலமாக விநியோகிக்கப்படும். விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்த இணைதளத்தின் மூலமாகவும், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும் ஆளறிசான்றினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு விண்ணப்பதாரா்கள் சென்னை செயின்ட் ஜாா்ஜ்கோட்டை வளாகத்தில் உள்ள இயக்குநா், ஆள் சோ்ப்பு தலைமை அலுவலகத்தை 044 - 25674924 என்ற தொலைபேசி எண் மூலம் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.