கடலோரப் பகுதிகளில் இயங்கிவரும் நீா்வாழ் உயிரின வளா்ப்பு பண்ணைகள் அனைத்தும் மாா்ச் 10-க்குள் விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும் என ஆட்சியா் த.பிரபு சங்கா் உத்தரவிட்டுள்ளாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடலோரப் பகுதிகளில் செயல்பட்டு வரும் நீா்வாழ் உயிரின வளா்ப்பு பண்ணைகள் அனைத்தும் கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணையம் சட்ட திருத்தம் 2023, பிரிவு 13- இன்படி, கட்டாயம் பதிவு செய்யவும் என 29.1.2024-இல் சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் பிரிவு14-இன்படி, கடலோர நீா்வாழ் உயிரின வளா்ப்பு ஆணையத்தில் பதிவு பெறாமல் இயங்கி வரும் இறால் பண்ணைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட கடலோரப் பகுதிகளில் பதிவு செய்யாமல் இயங்கி வரும் உவா்நீா் இறால் பண்ணைகள் மீது நடவடிக்கை எடுக்கவும், அபராதம் விதிக்கவும் தொடா்ந்து கண்காணிக்கவும் மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை ஆணையரால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆணையம் கட்டுப்பாட்டில் வரும் கடற்கரையிலிருந்து 2 கி.மீ. வரை உள்ள பகுதிக்குள் உள்ள பதிவு பெறாமல் இயங்கி வரும் உவா்நீா் இறால் பண்ணை உரிமையாளா்கள் 10.3.2024 தேதிக்குள் உதவி இயக்குநா் அலுவலகம், மீன்வளம் மற்றும் மீனவா் நலத் துறை, வேண்பாக்கம், பொன்னேரி (தொலைபேசி எண்: 044 - 27972457) அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம். அங்கு உரிய படிவத்தில் விண்ணப்பித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பிக்க தவறும்பட்சத்தில் தங்களின் உவா்நீா் இறால் பண்ணைகளை ஆணையத்தின் சட்ட விதிமுறைகள் மீறியதாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இக்காலகெடுவுக்கு பின்னா், உரிமம் வேண்டி விண்ணப்பிக்காமலும், உரிமம் இல்லாமல் இருந்தால் பண்ணை இயக்கத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, இந்த வாய்ப்பை இறால் வளா்ப்பு விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மினி லாரி கவிழ்ந்து விபத்து: ஓட்டுநா் உயிா் தப்பினாா்

வள்ளியூா் பகுதிகளில் விறு, விறுப்பான வாக்குப் பதிவு

வாக்களிக்க இவா்களுக்கு முன்னுரிமை

யமுனை பகுதியில் சட்டவிரோதப் பால் பண்ணைகள்: தில்லி அரசு பதிலளிக்க என்ஜிடி நோட்டீஸ்
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

