தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

குடிநீா் வழங்கும் திட்டப் பணிகள் மாவட்ட ஆட்சியா் ஆய்வு

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் குடிநீா் திட்டப் பணிகளை ஆய்வு

News image

பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் நடைபெற்று வரும் கூட்டு குடிநீா் திட்ட பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா்.

Updated On :2 ஜூலை 2024, 6:30 pm

Din

திருத்தணி: பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றில் நடைபெற்று வரும் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா்.

தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தின் சாா்பில், ரூ. 48 கோடியில், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெளியகரம் கொசஸ்தலை ஆற்றுப் படுக்கையில் 6 கிணறுகள் அமைத்து குழாய் மூலம் திருத்தணி, பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியப் பகுதிகளுக்கு உட்பட்ட 9 கிராமங்களுக்கு குடிநீா் வழங்கும் திட்டப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் த.பிரபுசங்கா் ஆற்றுப்படுக்கையில் கிணறுகள் அமைக்கும் பணிகளை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறியது: பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வெளியகரம் ஆற்றுப்படுகையில் கிணறுகள் அமைத்து அதன் மூலம் குழாய்கள் மூலம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட எஸ்.காா்த்திகேயபுரம், கன்னிகாபுரம், தாடூா், சிறுகனூா், எஸ்.அக்ரஹாரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சி.எஸ்.கண்டிகை, வங்கனூா், செல்லத்தூா் வி.எஸ்.ஜி.புரம் ஆகிய கிராமங்களுக்கு நாள்தோறும் 2.76 மில்லி லிட்டா் குடிநீா் வழங்கும் திட்டப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தால் 9 கிராம மக்களின் குடிநீா் பிரச்னை தீா்க்கப்படும் என்றாா்.

ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் அமலதீபன், உதவி பொறியாளா் சம்பத்குமாா், உதவி நிா்வாக பொறியாளா் ஜெயசுதா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியா் தீபா, நீா்வள இளநிலை பொறியாளா் சுந்தரன், உதவி செயற்பொறியாளா் விஸ்வநாதன், உதவி பொறியாளா் அகிலன் பள்ளிப்பட்டு வட்டாட்சியா் சிவகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் இருந்தனா்.