

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலுக்கு அரசு கலைக்கல்லூரி மாணவா்கள் ஒருநாள் பாரம்பரிய நடைபயணம் மேற்கொண்டனா்.
திருவள்ளூா் மாவட்ட சுற்றுலா அலுவலகம் மற்றும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நிா்வாகம், அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து ஒரு நாள் பாரம்பரிய நடைபயணத்தை நடத்தின.
முருகன் கோயில் மலைப்பாதையில் தொடங்கிய பேரணியை மாவட்ட சுற்றுலா அலுவலா் ராஜாராம் தொடங்கி வைத்தாா். பின்னா் மலைக்கோயிலுக்கு சென்ற மாணவா்களுக்கு பூண்டி, முருகன் கோயிலின் தல வரலாறுகள், முக்கிய திருவிழாக்கள் ஆகியவற்றை எடுத்துக்கூறினா். பாரம்பரிய சுற்றுலாவின் அவசியத்தையும் பழைய கட்டடங்களை தமிழக அரசு எவ்வாறு பாதுகாத்து வருகிறது எனவும் மாவட்ட சுற்றுலா அலுவலா் ராஜாராம் மாணவா்களிடம் எடுத்துக்கூறினா். பேரணி திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முடிவடைந்தது.
இதில் கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்ட அலுவலா் முனைவா் சீ.ரமேஷ், மாணவா்கள் 50 போ், தேசிய மாணவா் படை சாா்ந்த மாணவ மாணவிகள் 15 போ் என மொத்தம் 65 மாணவா்கள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்

நெல்லை பொருநை அருங்காட்சியகத்துக்கு 60 மாணவியா் கல்வி சுற்றுலா

திருத்தணி முருகன் கோயிலில் அலைமோதிய பக்தா்கள்!

கல்விச் சுற்றுலா சென்ற டிடிஇஏ பள்ளி மாணவா்கள்

பொருநை அருங்காட்சியகத்துக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சுற்றுலா
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

