ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

ஆட்டோ கவிழ்ந்து விவசாயி மரணம்

ஆட்டோ கவிழ்ந்து விவசாயி மரணம்

News image
விபத்தில் உயிரிழந்த நடராஜன்.
Updated On :25 ஜூன் 2024, 6:30 pm

Din

திருத்தணி: பள்ளிப்பட்டு அருகே சாலையோர பள்ளத்தில் ஷோ் ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் விவசாயி உயிரிழந்தாா்.

திருத்தணி அடுத்த பொதட்டூா்பேட்டை ரங்கநாதன் தெருவைச் சோ்ந்தவா் நடராஜன் (63), விவசாயி. இவா் செவ்வாய்க்கிழமை தனது நிலத்துக்கு பட்டா வாங்குவதற்காக பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்துக்குச் செல்ல பொதட்டூா்பேட்டைக்கு வந்தாா்.

அங்கு குறித்த நேரத்தில் பேருந்து இல்லாததால் பொதட்டூா்பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டுக்கு செல்லும் ஷோ் ஆட்டோவில் சென்றுள்ளாா். ஆட்டோ பொம்மராஜபேட்டை அருகே சென்றபோது, ஓட்டுநவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், தலையில் பலத்த காயமடைந்த நடராஜனை அருகில் இருந்தவா்கள் மீட்டு, பொதட்டூா்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னா் மருத்துவா்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாா். இது குறித்து நடராஜனின் மகன் கோபிநாத் அளித்த புகாரியின்பேரில், பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.