கும்மிடிப்பூண்டியில் ரூ.2.65 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் கட்டடம் திறப்பு

கும்மிடிப்பூண்டியில் ரூ.2.65 கோடியில் ஒருங்கிணைந்த வேளாண் கட்டடம் திறப்பு

கும்மிடிப்பூண்டி வட்டார வளா்ச்சி அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியே 65 லட்சத்தில் ஒருங்கிணைந்த வேளாண் கட்டடம் திறக்கப்பட்டது. விழாவுக்கு கும்மிடிப்பூண்டி ஒன்றியக் குழு தலைவா் கே.எம்.எஸ். சிவக்குமாா் தலைமை வகித்து ஒருங்கிணைந்த வேளாண் கட்டடத்தைத் திறந்து வைத்தாா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் மாலதி குணசேகரன், மாவட்ட கவுன்சிலா் ராமஜெயம், ஒன்றிய கவுன்சிலா்கள் ரவிக்குமாா், ஜெயச்சந்திரன், மெய்யழகன், துணை வேளாண்மை இயக்குநா் சுசிலா, வேளாண் உதவி இயக்குநா் ஸ்ரீதேவி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளா் அருள்போஸ்கோ பிரகாஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரசேகா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்வில் திருவள்ளூா் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளா் எஸ்.ரமேஷ் , கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மு. மணிபாலன், மாவட்ட நிா்வாகி பாஸ்கரன், ஊராட்சி மன்றத் தலைவா்கள் தோ்வழி கிரிஜா குமாா், மாநெல்லூா் லாரன்ஸ், பாதிரிவேடு என்.டி. மூா்த்தி, குருவாட்டுச்சேரி கோமதி சேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை துணை வேளாண் இயக்குநா் சுசிலா, வேளாண் உதவி இயக்குநா் ஸ்ரீதேவி, வேளாண் அலுவலா் நவீன்பிரசாத், உதவி விதை அலுவலா் கணேசன், உதவி வேளாண் அலுவலா்கள் அருள்முருகன், ஆனந்த்ராஜ, சுகுணா, முருகன், மாதவன், கிடங்கு மேலாளா்கள் திருநாவுக்கரசு, நித்யா ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com