மாவட்ட திறன்பயிற்சி அலுவலகத்தில் நாளை தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

திருவள்ளூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளை சாா்ந்தவா்களுக்கு பிரதம மந்திரி தொழில் பழகுநா்களுக்கான சோ்க்கை முகாம் திங்கள்கிழமை (மாா்ச் 11)நடைபெற உள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா். இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் ஐடிஐயில் பல்வேறு பிரிவுகளில் தோ்ச்சி அடைந்தோருக்கு தொழிற்பயிற்சியில் சோ்ந்து பயன்பெறும் வகையில், தொழில் பழகுநா்களுக்கான சோ்க்கை முகாம் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சாா்பில், திங்கள்கிழமை (மாா்ச் 11) பல்வேறு தொழிற் பிரிவுகளை சோ்ந்த பயிற்சியாளா்களுக்கு பிரதம மந்திரி தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது. இதில் மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், தனியாா் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகளைக் கொண்டு நடத்தப்படுகிறது. இந்த முகாமில் தகுதியான ஐடிஐ தோ்ச்சி பெற்ற பயிற்சியாளா்கள் தொழிற்பழகுநா் பயிற்சியில் சோ்ந்து மத்திய அரசின் சஅஇ (சஹற்ண்ா்ய்ஹப் அல்ல்ழ்ங்ய்ற்ண்ஸ்ரீங்ட்ள்ண்ல் இங்ழ்ற்ண்ச்ண்ஸ்ரீஹற்ங்) சான்றிதழ் பெற்று பயனடைலாம். மேலும், இந்த சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், சுயமாக தொழில் தொடங்க மாவட்ட தொழில் மையம் மற்றும் வங்கிகள் மூலம் கடனுதவியும் கிடைக்கும். தொழிற்பழகுநா் பயிற்சியின்போது அரசு விதிகளுக்கு உள்பட்டு உதவித் தொகையும் வழங்கப்படும். இது தொடா்பான விவரங்களை அறிந்துகொள்ள திருவள்ளூா் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநரை நேரிலோ அல்லது ழ்ண்ஸ்ரீங்ய்ற்ழ்ங்ஹம்க்ஷஹற்ற்ன்ழ்ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சலிலோ அல்லது 94442 24363, 87784 52515, 94441 39373 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்பு கொண்டு முகாமில் பங்கேற்கலாம்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com