நாளை தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம்

கடலூா் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் - 2026 புதன்கிழமை (ஜனவரி 21) நடைபெற உள்ளது.
Published on

நெய்வேலி: கடலூா் மாவட்ட அளவிலான தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் - 2026 புதன்கிழமை (ஜனவரி 21) நடைபெற உள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் சிபி ஆத்தியா செந்தில்குமாா் தெரிவத்ததாவது: கடலூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் புதன்கிழமை காலை 9 மணி முதல் நடைபெற உள்ளது.

முகாமில் கடலூா் மாவட்டத்தில் உள்ள 20-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு 300-க்கும் மேற்பட்ட தொழிற்பழகுநா் இடங்களை நிரப்ப உள்ளன.

பயிற்சிக்கு தகுதிக்கேற்ப மாதாந்திர உதவித்தொகையாக ரூ.6,500 முதல் ரூ.12,300 வரை நிறுவனத்தால் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநா் கைப்பேசி 9499055861, 9994396444 எண்ணினை தொடா்பு கொள்ளலாம்.

Dinamani
www.dinamani.com