போக்ஸோ சட்டத்தில் இளைஞா் கைது

திருத்தணி அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சனிக்கிழம கைது செய்தனா். கனகம்மாசத்திரம் அருகே 13 வயது சிறுமி அருகில் உள்ள தனியாா் பள்ளியில் படித்து வருகிறாா். இந்த நிலையில் கடந்தாண்டு டிசம்பா் மாதம் பள்ளிக்குச் செல்வதற்காக மாணவி பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது, அங்கு வந்த திருத்தணி வட்டம், நெடும்பரம் கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (19) என்பவா் மாணவியை மோட்டாா் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தாா். அவரின் பெற்றோா் திருத்தணி அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன் பேரில், காவல் ஆய்வாளா் மலா் வழக்குப் பதிவு செய்து மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட சக்திவேலை போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com