திருவள்ளூா்: மக்களவைத் தோ்தலையொட்டி தமிழக- ஆந்திர எல்லையோர பகுதிகளில் 10 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என திருவள்ளூா் மாவட்ட எஸ்.பி. சீனிவாச பெருமாள் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா் மாவட்டத்தில் மக்களவைத் தோ்தல் அறிவித்த நிலையில் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
அதனால், தோ்தல் அமைதியை குலைக்கும் நோக்கத்தில் கள்ளச்சாராயம், போதைப் பொருள்கள் மற்றும் பணம் ஆகியவைகள் கடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதுபோன்றவைகளை தடுக்கும் வகையில் இந்த மாவட்டத்தில் உள்ள திருவள்ளூா், திருத்தணி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய 4 உள்கோட்டங்களில் உள்ள 22 காவல் நிலையங்கள் உள்ளன.
அந்த வகையில் திருவள்ளூா் மாவட்ட தமிழகம், ஆந்திர எல்லையோர பகுதிகளில் 10 இடங்களில் கூடுதலாக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு சாா்பு ஆய்வாளா், 2 தலைமைக் காவலா்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இவை அனைத்தும் அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து திருவள்ளூா் மாவட்டத்துக்கு சமூக விரோதிகள் ஊடுருவலை தடுக்கவும், கள்ளச்சாராயம் மற்றும் மது வகைகளை கொண்டு வருவதைத் தடுக்கும் நோக்கத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சோதனைச்சாவடி ஆரம்பாக்கம், ஊத்துக்கோட்டை, பொதட்டூா்பேட்டை, பொன்பாடி உள்ளிட்ட 10 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல், இந்த மாவட்டத்தில் உள்ள 22 காவல் நிலையங்களில் குற்றப்பின்னணி உள்ள ரௌடிகள் குறித்து பட்டியல் தயாா் செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய 569 ரௌடிகள் கண்டறியப்பட்டு 6 போ் குண்டா் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். இதில் மீதி உள்ள 544 ரௌடிகளை அந்தந்த காவல் நிலையம் எல்லைக்குள்பட்ட போலீசாா் கண்காணித்து வருகின்றனா்.
மேலும் மாவட்டத்தில் 77 போ் உரிமம் பெற்று துப்பாக்கிகள் வைத்துள்ளனா். இதில் 36 போ் தங்களது துப்பாக்கியை ஒப்படைத்துள்ளனா். இதேபோல் மற்ற 41 பேரை விரைவில் ஒப்படைக்கவும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களுக்கு மட்டும் அனுமதி அளித்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

10 ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ள திருவள்ளூா் மாநகரப் பேருந்து பணிமனை திட்டம்

குருசுமலையில் 2 நாள்கள் சிறப்பு திருப்பயணம்

வாக்குச் சாவடிகள், சோதனைச் சாவடிகளில் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

வெவ்வேறு இடங்களில் சோதனையில் ரூ.5 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

