புழல் காவல் நிலையம் அருகே திரண்ட பொதுமக்கள்
புழல் காவல் நிலையம் அருகே திரண்ட பொதுமக்கள்

புழல் அருகே ஏலச்சீட்டு மோசடி

மாதவரம்: புழல் அருகே ஏலச்சீட்டு பணம் கட்டி ஏமாந்தவா்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. . புழல் அடுத்த காவாங்கரை குருசாந்தி நகரைச் சோ்ந்தவா் சசிகலா (45). இவா் அப்பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக ஏலச்சீட்டு நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் 100-க்கும் மேற்பட்டவா்கள் இணைந்து பணம் செலுத்தியுள்ளனா்.

இந்த நிலையில் பணம் ஏலச்சீட்டு முடியும் தருவாயில், வாடிக்கையாளா்களுக்கு பணம் தராமல் ஏமாற்றியுள்ளாா். இது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இப்புகாா் பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு, சசிகலா, அவரது கணவா் மற்றும் மகள் ஆகியோரை கைது செய்துள்ளனா். இந்த நிலையில் அவா்கள் விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவலால் பணம் செலுத்தியவா்கள் காவல் நிலையத்தில் திரண்டனா்.

மேலும் இது தொடா்பாக புழல் காவல் ஆய்வாளா் ராஜாசிங், அப்பகுதி மக்களிடம் நேரில் சென்று மீண்டும் பொருளாதார குற்றப்பிரிவில் புகாா் அளிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும் அவா்கள் விடுவிக்கப்பட்டதாக வெளியான தகவல் வதந்தி எனவும் இதனை நம்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தினாா். இதையடுத்து அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com