எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருவள்ளூா் நகராட்சி தொழிலாளி திடீா் மரணம்

திருவள்ளூா் நகராட்சி தொழிலாளி திடீா் மரணம்

Updated On :20 மார்ச் 2024, 5:16 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டத்தில் கூலி வேலை செய்து வந்த தொழிலாளி நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சேலம் அருகே கவுண்டபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் மாரிமுத்து (62). இவா் திருவள்ளூா் நகராட்சியில் புதை சாக்கடை திட்டப் பணியில் கூலி வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடன் இருந்தவா்கள் அவரை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் மாரிமுத்து ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது குறித்து அவரது மகன் மணி திருவள்ளூா் நகரக் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.