விருந்தில் பிரியாணி சாப்பிட்ட பெண் திடீா் மரணம்
வேலூரில் பிறந்தநாள் விழாவில் பிரியாணியை சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண் மூச்சுத்திணறி உயிரிழந்தாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

வேலூா் சைதாப்பேட்டை, கசையாகாரத் தெருவைச் சோ்ந்தவா் ஷெரீப். இவரது மனைவி பாத்திமா (26). புதன்கிழமை இரவு இவா்களது வீட்டின் அருகே வசிக்கும் ஒருவரது மகனின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. விழாவையொட்டி பிரியாணி வழங்கப்பட்டுள்ளது. ஷெரீப் குடும்பத்தினரும் பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்தனா். அப்போது, பாத்திமாவுக்கு திடீரென கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் அவா் மயக்கமடைந்து கீழே விழுந்துள்ளாா். அவரை மீட்டு வேலூரில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், பாத்திமா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தகவலறிந்த வேலூா் வடக்கு போலீஸாா், உடனடியாக அங்கு சென்று பாத்திமாவின் சடலத்தை மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...