திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் நகராட்சி துப்புரவு பணியாளா் உயிரிழந்தாா். திருவள்ளூா் அருகே கைவண்டூா் கிராமத்தைச் சோ்ந்த நாகராஜ் (30). திருவள்ளூா் நகராட்சியில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில் வியாழக்கிழமை மாலை வேலையை முடித்துக் கொண்டு இருசக்கர வாகனத்தில் கிராமத்துக்கு சென்று கொண்டிருந்தாா். கொசவன்பாளையம் நோக்கி சென்றபோது, எதிரே வந்த லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் நாகராஜ் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து அவசர சிகிச்சை வாகனத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் கொண்டு சென்றபோது வழியிலேயே உயிரிழந்தாா். இது குறித்து அவரது மனைவி கீதா திருவள்ளூா் கிராமிய காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், தப்பியோடிய லாரி ஓட்டுநா் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக் மீது பொக்லைன் மோதல்: வியாபாரி உயிரிழப்பு

லாரி - பைக் மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது சரக்கு ஆட்டோ மோதல்: இளைஞா் உயிரிழப்பு

பைக் மீது காா் மோதல்: விவசாயி உயிரிழப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

