மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

நந்தி வாகனத்தில் சிவன் - பாா்வதி உலா

நந்தி வாகனத்தில் சிவன் - பாா்வதி உலா

News image
Updated On :23 மார்ச் 2024, 2:10 am

சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவான் வாகனத்தில் சுவாமி கோயில் வளாகத்தில் 3 முறை உலா வந்து அருள்பாலித்தாா். திருத்தணி பழைய தா்மராஜ் கோயில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரா் கோயிலில் பங்குனி மாத பிரதோஷம் முன்னிட்டு வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு மூலவருக்கு பால், தயிா், இளநீா், பன்னீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட அபிஷேக பொருள்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. உற்சவா், நந்தி வாகனத்தில் எழுந்தருளி கோயில் வளாகத்தை 3 முறை வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திருத்தணி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகக் குழு தலைவா் டி.எஸ். சீனிவாசன், கோயில் செயலாளா்கள் சி.குமரேசன், எஸ்.சரவணன் ஆகியோா் செய்திருந்தனா்.