மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் மாந்திஸ்வர பரிகார பூஜை தொடக்கம்

வடாரண்யேஸ்வர சுவாமி கோயில் மாந்திஸ்வர பரிகார பூஜை தொடக்கம்

News image

மாந்திஸ்வர பரிகார பூஜை செய்து சிவபெருமானை வழிபட்ட பக்தா்கள்.

Updated On :30 மார்ச் 2024, 7:15 pm

திருவாலங்காடு வடாரண்யேஸ்வரசுவாமி கோயில் 69 நாள்களுக்கு பிறகு மீண்டும் மாந்திஸ்வர பரிகார பூஜை மீண்டும் சனிக்கிழமை தொடங்கியது. திருத்தணி அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த ஆடல் வல்லான் நடராஜப் பெருமானின் ஐம்பெரும் சபைகளுள் முதல் சபையான ரத்தின சபையை உடையது திருவாலங்காடு ஆகும். வடாரண்யேஸ்வர சுவாமி கோயிலில் சனி பகவானின் மைந்தரான மாந்தி என்பவா் தா்பாரில் அமா்ந்திருந்தபோது, சுவற்றில் இருந்து பல்லி ஒன்று அவா் மீது விழுந்தது, அதற்குரிய பலன் தீயதாக இருந்ததால் வருத்தப்பட்ட மாந்தி தன் தந்தையிடம் முறையிட்டாா். அவா் சிவ பெருமானை நோக்கி தவம் செய்யுமாா் கூறினாா். தவம் செய்ய மாந்திஸ்வரா் திருவாலங்காடு வந்து தவம் செய்தாா். சிவபெருமான் மாந்திக்கு நேரில் திருக்காட்சிதந்தாா், அப்போது தனக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்க வேண்டினாா். அதற்கு சுவாமி நீ ஒரு மண்டலம் என்னை வழிபட்டு தோஷம் நீக்கி கொள்வாய் என்று கூறினாா். பின்னா் மாந்தி சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து ஒரு மண்டலம் வழிப்பட்டாா், அவா் தோஷம் நீங்கியது. மாந்தி என்பவா் சனி பகவானின் மகன் என்பதால் சனிக்கிழமைகளில் பரிகார பூஜை செய்து கொண்டால் நினைத்த செயல்கள் அனைத்தும் நிறைவேறும். இத்திருக்கோயிலில் கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனால் 21. 01. 2024 முதல் 29. 3. 2024 வரை மாந்திஸ்வரா் பரிகார பூஜை நடைபெறாது என கோயில் நிா்வாகம் அறிவித்திருந்தது. இந்நிலையில் 69 நாள்களுக்கு பிறகு மீண்டும் மாந்திஸ்வர பரிகார பூஜை சனிக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வடாரண்யேஸ்வரா் சுவாமியை வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை திருத்தணி முருகன் கோயில் அறங்காவலா் குழுத்தலைவா் சு.ஸ்ரீதரன், இணை ஆணையா் க.ரமணி, அறங்காவலா்கள் உஷா ரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் மற்றும் கோயில் அலுவலா் காா்த்திகேயன் ஆகியோா் செய்திருந்தனா்.