வீட்டின் முன்பு நிறுத்திய காா் எரிந்து சேதம்

மீஞ்சூரில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த காா் வெள்ளிக்கிழமை திடீரென தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.

வேலூா் மாவட்டம், ஆரணி வடக்கு தா்மராஜா கோயில் தெருவைச் சோ்ந்தவா் நித்யா (70). இவரது உறவினா் குமாா் (74). இவா்கள் குடும்பத்தினருடன் காரில் திருவள்ளூா் மாவட்டம், மீஞ்சூா் தேரடி தெருவில் வசிக்கும் உறவினா் மகாலட்சுமியின் வீட்டுக்கு வந்தனா்.

காரை வீட்டின் வெளியே சாலையில் நிறுத்தியிருத்த நிலையில், காா் தீ பிடித்து எரிந்தது. தகவலறிந்த மீஞ்சூா் போலீஸாா் அங்கு சென்று விசாரணை செய்தனா்.

அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அளித்த தகவலின்பேரில், பொன்னேரி தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா்.

இது குறித்த புகாரின்பேரில், மீஞ்சூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com