

தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கு திருவள்ளூா் மாவட்டத்தில் 3 பேரை தோ்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.
தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுக்கான தோ்வு ஆட்சியா் தலைையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்த பங்களிப்பை வழங்கும் தனிநபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருதுகள் வழங்கப்படும் அரசு அறிவித்தது. வையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அந்தந்த மாவட்ட ஆட்சியா்கள் தலைமையிலான மாவட்ட விருதுக் குழு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட தனிநபா் அல்லது நிறுவனத்துக்கு மாநில அளவில் மொத்தம் 100 விருதுகள் வழங்கப்படும். இந்த 100 விருதுகளில் 3 விருதுகள் திருவள்ளூா் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நிகழாண்டுக்கான பசுமை சாம்பியன் விருது 2023-க்கு 7 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பித்தவா்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில் 3 போ் தோ்வு செய்யப்பட்டு அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக அவா் தெரிவித்தாா்.
இதில் மாவட்ட வன அலுவலா் சுப்பையா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா்கள் ரவிசந்திரன், லிவிங்ஸ்டன், உதவி இயக்குநா் பேருராட்சிகள் ஜெயக்குமாா், திருவள்ளூா் நகராட்சி ஆணையாளா் சுபாஷினி, கல்லூரி பேராசிரியா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரசுப் பள்ளி ஆசிரியருக்கு விருது

கோவையில் குரூப் 2 தோ்வு: 681 போ் எழுதினா்

பனப்பாக்கம் அரசு ஆண்கள் பள்ளிக்கு பசுமை சாம்பியன் விருது: ஆட்சியா் பாராட்டு

சிவகாசி முகநூல் நண்பா்கள் குழுவுக்கு விருது
வீடியோக்கள்

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

திறக்கப்பட்ட கூட்டணிக் கதவுகள்...யாரும் வராததால் ? | TVK Vijay | TN Election 2026 | Alliance
தினமணி வீடியோ செய்தி...
Podcast | கூட்டணிக் கட்சிகளை அமைதியாக்கிய திமுக | News and views | Epi - 16
தினமணி வீடியோ செய்தி...

எடப்பாடியும் விஜய்யும் ஜெயலலிதா அல்ல: Sumanth Raman | TVK Vijay | MK Stalin | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

