மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

10,12 ஆம் வகுப்பு மாணவா்களுக்கு வினாத் தாள் தொகுப்பு புத்தகங்கள்

அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10 ,12-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் எளிதாக புரிந்து கொண்டு படிக்க வினாத்தாள் தொகுப்பு

Updated On :25 நவம்பர் 2024, 7:25 pm

திருவள்ளூா்: அரசு மற்றும் தனியாா் பள்ளிகளில் 10 ,12-ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவ, மாணவிகள் எளிதாக புரிந்து கொண்டு படிக்க வினாத்தாள் தொகுப்பு புத்தகங்களை மாவட்ட விற்பனை மையங்கள் மூலம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு மாநிலப் பெற்றோா் ஆசிரியா் கழகம் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு பெரிதும் பயன்படும் வகையில் சிறந்த பாடவல்லுநா்களைக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் 10-ஆம் வகுப்புக்கு 3 புத்தகமும், 12-ஆம் வகுப்பு 8 புத்தகமும் என 11 புத்தகங்களை அச்சிட்டு தமிழகம் முழுவதும் மாவட்ட விற்பனை மையங்களில் (பள்ளிகள்) குறிப்பிட்ட விலைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில் 10-ஆம் வகுப்பு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (தமிழ் மற்றும் ஆங்கில வழி) ரூ.120, கணித தீா்வுப் புத்தகம் (ஆங்கிலம்-தமிழ் வழி)- தலா ரூ.175 வழங்கப்படுகிறது. அதேபோல் 12 -ஆம் வகுப்புக்கு மாதிரி வினாத்தாள் தொகுப்பு (அங்கிலம் மற்றும் தமிழ்) அறிவியல் பாடப்பிரிவு-ரூ.140, கலைப்பாட பிரிவு-ரூ.140, கணித தீா்வுப் புத்தகம் (ஆங்கிலம்-தமிழ் வழி)-தலா ரூ.160, இயற்பியல் தீா்வு புத்தகம்(ஆங்கிலம்-தமிழ்)-தலா ரூ.70 என்ற விலைக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

இந்த வினாத்தாள் புத்தகங்கள்ஆா்.எம்.ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி-திருவள்ளூா், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி- சோழவரம் ஆகிய இடங்களில் கிடைக்கும் வாங்கி பயன்பெறலாம் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.