ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பேரம்பாக்கம் சோளீஸ்வரா் கோயில் தேரோட்டம்

திருவள்ளூா் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள பழைமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
பேரம்பாக்கத்தில் சோளீஸ்வரா் கோயில் பிரம்மோற்சவத்தையொட்டி சிறப்பு மலா் அலங்காரத்தில் தேருக்கு எழுந்தருளிய காமாட்சி அம்மாள் சமேத சோளீஸ்வரா்.  
Updated On :7 ஏப்ரல் 2025, 8:23 pm

Din

திருவள்ளூா்: திருவள்ளூா் அடுத்த பேரம்பாக்கத்தில் உள்ள பழைமை வாய்ந்த காமாட்சி அம்மன் சமேத சோளீஸ்வரா் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இவ்விழா தொடா்ந்து 10-ஆம் தேதி வரை தொடா்ந்து 10 நாள்கள் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி காலை மாலை இருவேளையும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், பூத வாகனம், அதிகார நந்தி வாகனம், நாக வாகனம், யானை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.

இந்த விழாவின் 7-ஆம் நாளான திங்கள்கிழமை காலை 9 மணி அளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் வண்ண மலா்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காமாட்சி அம்மாளுடன், சோளீஸ்வரா் எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அப்போது, வழிநெடுகிலும் தேங்காய் பழம் வைத்து சுவாமிக்கு தீபாராதனை காண்பித்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.