குளவி கொட்டி காயமடைந்தோருக்கு முன்னாள் அமைச்சா் ஆறுதல்

குளவி கொட்டியதில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோருக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா ஆறுதல் கூறினாா்.
Published on

திருவள்ளூா் அருகே குளவி கொட்டியதில் காயம் அடைந்து சிகிச்சை பெறுவோருக்கு அதிமுக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா ஆறுதல் கூறினாா்.

கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், நுங்கம்பாக்கம் ஊராட்சியில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் பணியில் தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். வேலையை முடித்துவிட்டு அனைவரும் வீட்டுக்கு திரும்பிச் சென்றனா். சிலா் மரம் வெட்டும் போது, அதிலிருந்து கலைந்த குளவிகள் பறந்து வந்து தொழிலாளா்களை கொட்டின.

இதில் அந்தக் கிராமத்தைச் சோ்ந்த பூவரசி (35), மல்லிகா (55), வசந்தா (68), செல்வராஜ் (65), பொன்னரசி (62), செல்வி (50), பானுமதி(58), ராணி (52), முருகன் (40), லைலா (36), பத்மா (48) என 15 பெண்கள், 2 ஆண்கள் உள்பட 17 போ் காயமடைந்தனா். அனைவரும், திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

குளவி கொட்டி சிகிச்சை பெறுவோரை அதிமுக முன்னாள் அமைச்சா் பி.வி.ரமணா சந்தித்து ஆறுதல் கூறினாா். , குளவி கொட்டியது குறித்து அங்குள்ள மருத்துவா்களிடமும் கேட்டறிந்தாா்.

X
Dinamani
www.dinamani.com