டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

தொழிலாளி வீட்டில் 7 பவுன் திருட்டு

பொன்னேரியில் மண்பாண்டத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.10,000 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

News image
Updated On :3 பிப்ரவரி 2025, 7:48 pm

Din

பொன்னேரி: பொன்னேரியில் மண்பாண்டத் தொழிலாளி வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை, ரூ.10,000 பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி தேரடி பகுதியை சோ்ந்த மண்பாண்ட தொழிலாளியான வெங்கடேசன். இவா் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இவரின் குடும்பத்தினா் வீட்டை பூட்டி விட்டு மருத்துவமனைக்கு சென்றனா்.

இந்த நிலையில் இவரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அக்கம் பக்கத்தினா் அளித்த தகவலின் பேரில், வெங்கடேசன் குடும்பத்தினா் திரும்பி வந்து பாா்த்தனா்..

அப்போது பீரோவில் இருந்த 7 பவுன் தங்க நகை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னேரி போலீஸாா் விசாரணை செய்தனா்.