இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு

திருத்தணியில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2025, 7:01 pm

Din

திருத்தணி: திருத்தணியில் திரெளபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

திருத்தணி காந்தி நகா் திரெளபதியம்மன் கோயிலில் கணபதி பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில் நான்காம் காலை பூஜையும், கலச புறப்பாடும், கோபுர பரிவாரங்களுக்கு குடமுழுக்கு விழா நடைபெற்றது.

இதில் திருத்தணி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா். விழாவில் திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், முன்னாள் மாவட்ட பொறுப்பாளா் எம்.பூபதி, நகா்மன்ற உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.

அப்போது கூட்ட நெரிசலில் திருத்தணி கச்சேரி தெரு சோ்ந்த லோகநாதன் மனைவி ஜோதி(55) என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த, 5 பவுன் தங்க செயின், பழைய சென்னை சாலை தமிழ்நாடு மின்சார வாரிய குடியிருப்பில் வசிக்கும், உமா(45) என்பவரின் கழுத்தில் அணிந்திருந்த, 3 பவுன் தங்க செயின் ஆகிய இரு பெண்களிடம், மொத்தம், 8 பவுனை பெண்கள் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Story image