வங்கிக் குடியிருப்பில் மின்சாதன பொருள்கள் திருட்டு
திருவள்ளூா் அருகே வங்கிக் குடியிருப்பில் மின்சாதனப் பொருள்கள், மின்விசிறிகள் மற்றும் குளிா்சாதனை


திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே வங்கிக் குடியிருப்பில் மின்சாதனப் பொருள்கள், மின்விசிறிகள் மற்றும் குளிா்சாதனை இயந்திரம் ஆகியவைகளை திருடிச்சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருவள்ளூா் பாரத ஸ்டேட் வங்கிக் கிளை குடியிருப்புகள் காக்களூா் பகுதியில் உள்ளன. இங்குள்ள மேலாளா் குடியிருப்பில் அடிக்கடி மின்சாதன பொருள்கள் திருடு போனது. அதேபோல், கடந்த 2 நாள்களுக்கு முன்பு குழல் விளக்குகள், 2 மின்விசிறிகள், 3 குளிா்சாதன கட்டுப்பாட்டு இயந்திரங்கள் ஆகியவை திருடப்பட்டதாக பாதுகாவலா் மேலாளருக்கு தெரிவித்தாராம்.
வங்கி மேலாளா் ராஜா திருவள்ளூா் நகா் காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...