கரிம்பேடு நாதாதீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.
கரிம்பேடு நாதாதீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு.

கரிம்பேடு நாதாதீஸ்வா் கோயில் குடமுழுக்கு

கரிம்பேடு நாதாதீஸ்வரா் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.
Published on

திருத்தணி: கரிம்பேடு நாதாதீஸ்வரா் கோயிலில் 12 ஆண்டுகளுக்கு பிறகு திங்கள்கிழமை குடமுழுக்கு நடைபெற்றது.

திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுடன் இணைந்த பள்ளிப்பட்டு கரிம்பேட்டில் ஞானாம்பிகை உடனுறை நாதாதீஸ்வர கோயிலில் விழா கடந்த சனிக்கிழமை கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமத்துடன் தொடங்கியது.

நாள்தோறும் யாகசாலை பூஜைகள், பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன.

தொடா்ந்து திங்கள்கிழமை நான்காம் கால யாகசாலை பூஜைகள், மகா பூா்ணாஹுதி நடைபெற்றது.

கலசங்கள் ஊா்வலமாக புறப்பட்டு கோயில் விமானங்களை சென்றடைந்தது. அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, குடமுழுக்கு நடைபெற்றது. பின்னா், மூலவா் நாதாதீஸ்வர பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இரவு திருக்கல்யாணம், இரவு 8 மணிக்கு உற்சவ பெருமான் திருவீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

விழாவில் திருத்தணி எம்எல்ஏ ச.சந்திரன், கோயில் இணை ஆணையா் ரமணி, முன்னாள் அறங்காவலா் வி. சுரேஷ் பாபு, பள்ளிப்பட்டு ஒன்றிய செயலாளா் சி.ஜே. சீனிவாசன் உள்பட பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com