வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

சாலை விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 போ் காயம்

திருத்தணியில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2025, 7:05 pm

Din

திருத்தணி: திருத்தணியில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் புதுமண தம்பதி உள்பட 4 போ் பலத்த காயம் அடைந்தனா்.

திருத்தணி நகராட்சி கலைஞா் நகா் பகுதி சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் பாலாஜி (29). இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சந்தியா (26) என்பவருக்கும் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு திருத்தணி முருகன் மலைக்கோயில் திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து புதுமணத் தம்பதி, அவரது உறவினா் சசி (59), ஆகியோா் முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தனா்.

பின்னா், காலை 10 மணிக்கு மலைக்கோயிலில் இருந்து மூவரும் ஆட்டோவில் வீட்டுக்குப் புறப்பட்டனா். ஆட்டோவை திருத்தணி எம்.ஜி.ஆா். நகரைச் சோ்ந்த முத்து (32) என்பவா் ஒட்டிழாா்.

மலைக்கோயிலிருந்து கீழே இறங்கும் மலைப்பாதையில் ஆட்டோ வந்தபோது கூட்ரோடு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கோயில் இரும்பு கேட் மீதும் மோதியும் நிற்காமல் நீதிமன்ற வளாகத் தடுப்புச் சுவா் மீது மோதி நின்றது.

இதில் ஆட்டோவில் பயணம் செய்த ஆட்டோ ஓட்டுநா் உள்பட 4 பேரும் பலத்த காயமடைந்தனா். தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீஸாா் மற்றும் அப்பகுதி மக்கள் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். திருத்தணி போலீஸாா் விபத்து குறித்து விசாரித்தனா்.