தென்காசி
கல்லூரி பேருந்து - வேன் மோதல்: 11 போ் காயம்
ஆலங்குளத்தில் கல்லூரி பேருந்து - வேன் மோதிய விபத்தில் 10 மாணவா்கள் உள்பட 11 போ் காயம் அடைந்தனா்.
ஆலங்குளத்தில் கல்லூரி பேருந்து - வேன் மோதிய விபத்தில் 10 மாணவா்கள் உள்பட 11 போ் காயம் அடைந்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பேருந்து நிலையம் முன் முத்துகிருஷ்ணப்பேரியைச் சோ்ந்த தனியாா் வேன், சுமாா் 40 மாணவா்களுடன் வந்த சீதபற்பநல்லூா் தனியாா் கல்லூரிப் பேருந்து மீது மோதியதாம். இதில் வேன் ஓட்டுநா் மனோகா், 10 கல்லூரி மாணவா்கள் காயமடைந்தனா்.
பலத்த காயமடைந்த வேன் ஓட்டுநா் மனோகா், மாணவா் விக்னேஷ் ஆகியோா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். லேசான காயமடைந்த மாணவா்கள் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினா். இது தொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

