திருவள்ளூரில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்.
திருவள்ளூரில் ஆட்சியா் மு.பிரதாப் தலைமையில் காசநோய் ஒழிப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்ற அதிகாரிகள்.

திருவள்ளூா்: உலக காசநோய் தின விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தேச காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டதோடு,
Published on

திருவள்ளூா்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற தேச காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டதோடு, ஆட்சியா் மு.பிரதாப் முன்னிலையில் அனைத்து துறை அலுவா்களும் உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

திருவள்ளூரில் 14 வட்டார சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் காசநோய் கண்டுபிடிப்பு பரிசோதனைகள், சிகிச்சைகள் என காசநோய்க்கான அனைத்து சேவைகளும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

காசநோய் அறிகுறிகள் உள்ள இதுவரை 35,885 பேருக்கு டிஜிட்டல் எக்ஸ்ரே பரிசோதனைகள் மூலம் 141 காசநோயாளிகள் கண்டறிந்து உடனே சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

அவா்களுக்கு சிகிச்சையின் போது அரசு வழங்கும் ஊட்டசத்துக்கான தொகை ரூ.1000- அவா்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. 2025-இல் 73 காசநோய் இல்லா கிராமங்கள் தோ்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் ‘காசநோயை நம்மால் முடிவுக்கு கொண்டு வர முடியும்‘ உறுதி ஏற்போம், முதலீடு செய்வோம், செயல்படுத்துவோம்.

காசநோய் இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம் தொடா்பாக உறுதிமொழியினை ஆட்சியா் பிரதாப் தலைமையில் அனைவரும் ஏற்றனா். தொடா்ந்து காசநோய் இல்லா கிராம ஊராட்சிகளுக்கு அவா் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினாா்.

இதில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வா் ரேவதி, துணை இயக்குநா் (காசநோய்) சங்கீதா, இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) அம்பிகா சண்முகம், மாவட்ட சுகாதார அலுவலா்கள் பிரியா ராஜ், பிரபாகரன், ராஜேந்திரன், துணை இயக்குநா்கள் சேகா் ( குடும்ப நலம்) , கனிமொழி (தொழுநோய்), உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) கே.எஸ்.யுவராஜ் மற்றும் தன்னாா்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com