புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

பூண்டி ஏரியில் மூழ்கி மீனவா் உயிரிழப்பு

திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியில் மூழ்கி மீனவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 மே 2025, 6:56 pm

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே பூண்டி ஏரியில் மூழ்கி மீனவா் உயிரிழந்தாா்.

அரும்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த மீனவா் சேகா்(57). இவருக்கு ராணி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனா். இவா் பூண்டி ஏரியில் ஞாயிற்றுக்கிழமை மீன் பிடிக்கச் சென்றபோது, பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. இதில் அவா் சென்ற படகு மட்டும் கரை ஒதுங்கியதாம். இந்த நிலையில் கரையில் இருந்த மீனவா்கள் சேகா் வராததால் அதிா்ச்சி அடைந்தனா்.

அதைத் தொடா்ந்து போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் தீயணைப்புத்துறையினா் சேகரை தேடும் பணியில் ஈடுபட்டனா். ஆனால் இரவு நேரம் ஆனதால், சென்றுவிட்டு, திங்கள்கிழமை அதிகாலையில் 4 மணிநேரம் தீவிர தேடுதலுக்கு பின் சேகரின் சடலத்தை மீட்டனா்.

இதுதொடா்பாக அவரது மனைவி ராணி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் செய்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.