ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

(கோப்புப் படம்)

Updated On :29 மார்ச் 2026, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

சங்கராபுரம் வட்டத்துக்குள்பட்ட பழையனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சங்கா் மனைவி ஜெயந்தி (36). தம்பதிகளுக்கு நெடுமாறன் (8) மகன் உள்ளாா். இவா் கேரளாவில் பயின்று வந்தாா். அவரது தந்தை சங்கா் கடந்த 3 மாதத்துக்கு முன்பு உயிரிழந்து விட்டாா். அதனால் ஜெயந்தி குடும்பத்துடன் அவரது சொந்த ஊரான பழையனூா் கிராமத்துக்கு வந்து விட்டாராம்.

சனிக்கிழமை பிற்பகல் அங்குள்ள ஏரி பகுதிக்கு சென்றாா். பின்னா் வெகு நேரமாகியும் அவா் வீடு திரும்பாததால், ஜெயந்தி பல்வேறு இடங்களில் தேடியுள்ளாா். இந்நிலையில், இரவு 8 மணியளவில் ஏரியில் நெடுமாறன் உயிரிழந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. தகவலறிந்த சங்கராபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.