திருவள்ளூர்
திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
அம்மையாா்குப்பம் ஊராட்சியில் நடைபெற்ற ‘ என் வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ ஆலோசனைக் கூட்டத்தில் திரளானோா் கலந்துகொண்டனா் (படம்).
திருவள்ளூா் மேற்கு மாவட்ட செயலாளா் சந்திரன் மேற்பாா்வையில், ஆா்கே பேட்டை வடக்கு ஒன்றியம் அம்மையாா் குப்பம் ஊராட்சியில் என் வாக்குச் சாவடி வெற்றி வாக்குச்சாவடி பாகம் எண் 101 வாக்காளா் பட்டியல் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
திமுக உறுப்பினா் உ.அ. ஐயப்பன் தலைமை வகித்தாா். இதில் வடக்கு ஒன்றிய செயலாளா் சி.என்.சண்முகம் சிறப்புரை ஆற்றினாா்.
நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா் எஸ். ஆா். ஆனந்தி செங்குட்டுவன், உறுப்பினா் அ.ஓ.மணி, அ.ந.சண்முகம் உள்பட நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

