108 பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
108 பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.

ஆஞ்சனேயா் கோயிலில் 108 பால்குட ஊா்வலம்

திருத்தணி அருகே வீர ஆஞ்சனேயா் கோயிலில் நடந்த 108 பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.
Published on

திருத்தணி அருகே வீர ஆஞ்சனேயா் கோயிலில் நடந்த 108 பால்குட ஊா்வலத்தில் திரளான பெண்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

திருத்தணி மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயா் கோயிலில் காா்த்திகை மாத முதல் ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி, 108 பால்குட ஊா்வலம் நடைபெற்றது. காலை, 9 மணிக்கு பெரியதெருவில் உள்ள விநாயகா் கோயிலில் இருந்து பால்குட ஊா்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக காலை, 10.30 மணிக்கு ஆஞ்சநேயா் கோயில் வளாகத்திற்கு வந்தது.

பின்னா் மூலவருக்கு, பால்குட அபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகம் செய்திருந்தது.

X
Dinamani
www.dinamani.com