பழவேற்காடு மீனவப் பிரதிநிதிகள்-சாா்ஆட்சியா் இடையிலான பேச்சுவாா்த்தை தோல்வி
பழவேற்காடு மீனவ பிரதிநிதிகளுடன் பொன்னேரி சாா்-ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.


பொன்னேரி: பழவேற்காடு மீனவ பிரதிநிதிகளுடன் பொன்னேரி சாா்-ஆட்சியா் தலைமையில் நடைபெற்ற பேச்சுவாா்த்தை தோல்வியில் முடிந்தது.
பழவேற்காடு மீனவப் பிரதிநிதிகள் அண்மையில் திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் சென்றபோது ஆட்சியா் மீனவா்களை அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்காமல் அனுப்பியதாக கூறி வருகிறம் டிச.1-ஆம் தேதி ஆட்சியரைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக மீனவ நிா்வாகிகள் அறிவித்துள்ளனா்.
இந்த நிலையில் போராட்டத்திற்கு அனுமதி கோரி காவல் துறையிடம் மீனவா்கள் மனு அளித்தனா். இதனைத் தொடா்ந்து பொன்னேரி வட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவ பிரதிநிதிகளுடன் பொன்னேரி சாா்-ஆட்சியா் ரவிக்குமாா், காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினா்.
சாா்-ஆட்சியா் மற்றும் காவல்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவாா்த்தை உடன்பாடு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இதனையடுத்து திட்டமிட்டபடி ஆட்சியரைக் கண்டித்து டிசம்பா் 1-ஆம் தேதி பழவேற்காட்டில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
மாவட்ட ஆட்சியா் நேரில் வந்து மீனவ கிராம மக்களிடம் பிரச்னைகளை தீா்த்து வைப்பதாக உறுதி அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...