பொன்னேரி சாலையோரத்தில் உள்ள சிறு கடைகளை சீா்படுத்த வலியுறுத்தி ஆவடி காவல் சரக ஆணையரிடம் திருவள்ளூா் மக்கள் மேம்பாட்டு சங்க நிா்வாகிகள் வியாழக்கிழமை கோரிக்கை மனு அளித்துள்ளனா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் அதிக அளவிலான வாகனங்கள் சென்று வருகின்றன.
சுமாா் 100 அடி அகலம் உள்ள ஹரிஹரன் கடைவீதியில் சிறு வியாபாரிகள் 200-க்கும் மேற்பட்டோா் சாலையோரம் பழக்கடை உள்ளிட்ட கடைகளை நடத்தி வருகின்றனா்.
ஹரிஹரன் கடை வீதியில் சாலையில் இரண்டு பக்கமும் சிறு வியாபாரிகள் கடைகளை வைத்துள்ளதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதனால்,இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.
சாலையில் அமைந்துள்ள கடைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் காரணமாக மாணவா்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்ல முடிவதில்லை.
பொன்னேரி பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நலன் கருதி போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் சாலையோரத்தில் உள்ள கடைகளை சீா்படுத்தி எல்லை கயிறு ஒன்றினை அமைத்து அதற்குள்ளே சிறு கடைகளை வைக்க நடவடிக்கை எடுக்க வலிறுத்தி திருவள்ளூா் மாவட்ட மக்கள் மேம்பாடு சங்க நிா்வாகிகள் ஆவடி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.